பதுளை கோர விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Nov 03, 2024 03:57 PM GMT
Report

பதுளை, துன்ஹிந்த பகுதியில் ஏற்பட்ட கோர பேருந்து விபத்து தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதா அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதா? என்பதைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த மாணவிகளின் இறுதிக் கிரியைகள் இன்று (03) இடம்பெற்றுள்ளன.

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த எல்ல பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளையில் இடம்பெற்ற கோர விபத்து: உயிரிழந்த மாணவியின் இறுதி வட்ஸ்அப் பதிவு

பதுளையில் இடம்பெற்ற கோர விபத்து: உயிரிழந்த மாணவியின் இறுதி வட்ஸ்அப் பதிவு

பதுளை பேருந்து விபத்து

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், வேகமாக பேருந்து பயணித்த விதம் கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.

பதுளை கோர விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Badulla Bus Accident Fault Or Negligence

பேருந்து தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பதுளை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது பேருந்தின் சாரதி மூன்றாவது அல்லது நான்காவது கியரில் பயணித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பதுளை பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோட்டம்

பதுளை பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோட்டம்

தீவிர விசாரணை

இவ்வாறான நிலையில், சுமார் 4 கிலோமீற்றர் செங்குத்தான பகுதியில் பேருந்து வேகமாகச் சென்றதால் வழுக்கி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மண் மேட்டில் மோதியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பதுளை கோர விபத்து தொழில்நுட்பக் கோளாறா- கவனயீனமா! தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Badulla Bus Accident Fault Or Negligence

எவ்வாறாயினும் இயந்திரக் கோளாறா? அல்லது வாகனம் ஓட்டும் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்து நேரிட்ட போது பேருந்து எவ்வாறு இயக்கப்பட்டது என்பதை தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதிலும் காவல்துறையினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மாணவிகள் உட்பட 40 பேரில் 6 பேர் சிகிச்சை பெற்று பதுளை போதனா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். 7 பேர் தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025