பதுளையில் இடம்பெற்ற கோர விபத்து: உயிரிழந்த மாணவியின் இறுதி வட்ஸ்அப் பதிவு
பதுளை (Badulla) - துன்ஹிந்தவில் இடம்பெற்ற பஸ் விபத்தின் உயிரிழந்த மாணவியொருவரின் வட்ஸ் அப் பதிவொன்று வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதுளை-துன்ஹிந்தவில் கடந்த 1 ஆம் திகதியன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதுடன் அதில் 2 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதுளை விபத்து
இந்த விபத்தில் நிவிதிகல, தொலபுகமுவ, பஹல கந்தவில் வசித்த இசுரி உமயங்கனா மற்றும் குருநாகல், ஹுனுபொலகெதர, அம்பகொட்டே ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பூபதி ஹெட்டிமுல்ல ஆகிய 23 வயதுடைய இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் பஸ் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான இசுரி உமயங்கனா,01 ஆம் திகதியன்று தனது தந்தையின் பிறந்தநாளுக்கு வட்ஸ்அப்பில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதிகாலையில் எழுந்த நிலையில், 05.03 மணிக்கு வட்ஸ்அப்பில் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வட்ஸ் அப் பதிவு
மூன்று பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளான இசுரி உமயங்கனா பல்கலைக்கழக களப்பயணத்திற்குத் தயாராக இருந்த இசுரி உமயங்கனா அன்று காலை தன் தந்தைக்கு வாழ்த்துச் சொல்ல மறக்கவில்லை.

எனவே இந்த நிகழ்வானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்