தேர்தலுக்காக அரசியல் நாடகம் நடத்தும் சுமந்திரன்: கடுமையாக சாடும் தவராசா
சமஸ்டிதீர்வு வேண்டாம் என்று கூறிய சுமந்திரன் (M. A. Sumanthiran) தற்பொழுது தேர்தல் வந்தவுடன் சமஸ்டி பற்றி பேசுகின்றார் என ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (KV Thavarasha) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (02.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம் மௌனிக்கும் வரைக்கும் தமிழரசுக்கட்சி தூண் போல் இருந்தது. ஆனால் 2010ல் சுமந்திரன் உள்வாங்கப்பட்டதிலிருந்து அந்த தூண் சிதறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் இல்லை தனி மனித சர்வாதிகாரம் நடக்கின்றது.
இவர்கள் தமிழ் தேசியத்தை அழித்து விட்டார்கள், தமிழரசுகட்சியில் இலஞ்ச ஊழல் நடைபெறுகின்றது.
தமிழர்களின் பிரச்சினைகளை நாம் ஒன்றாக கலந்துரையாடி தென்னிலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும்.
எனினும், நமது தமிழ் அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசுக்கு எது சார்பாக இருக்கின்றதோ அதையே செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |