வாகன சாரதிகளின் கவனத்திற்கு..! பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு
Badulla
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
பதுளை-கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்த வீதிப் பகுதிக்கு இடையில் 03 இடங்களில் மண் மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சாரதிகளின் கவனத்திற்கு
இதன் காரணமாக இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடையிலான பகுதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மண் அகற்றும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.




தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்