பதுளையில் மாணவி மாயம்!
மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்குச் சென்று வீடுதிரும்பவில்லை என காவல் நிலையத்தில் மாணவியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் மேலதிக வகுப்புக்கு செல்வதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டிலிருந்து மாணவி சென்ற நிலையில், அதன்பின்னர் அவர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
இதனையடுத்து அவரது தாயாரினால் கஹட்டருப்ப காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதுளை – களன் தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணவி எடுத்துச் சென்ற புத்தகப்பை, கையடக்கத் தொலைபேசி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன பதுளை கோபோ பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றிற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த தொலைபேசியின் சிம் அட்டை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கஹட்டருப்ப காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.