சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யாழ்ப்பாணத்தில் சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றிச் சென்றவர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உடுவில் பகுதிகளில் வெதுப்பக உற்பத்திப் பொருட்கள் விற்பனை வாகனங்கள் தொடர்பாகத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மருத்துவச் சான்றிதழ்
அதன் போது, உரிய முறையில் வாகனத்தைப் பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை மற்றும் மருத்துவச் சான்றிதழ் கொண்டிராமை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக நான்கு உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (23-04-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களைக் கடுமையாக எச்சரித்த மன்று, தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 18 மணி நேரம் முன்