மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா...! பதைபதைக்கும் பல ஆதாரங்கள்
பன்னிரண்டு வயதே நிரம்பிய பாலச்சந்திரனின் மரணம், போரின் கொடூரத்திற்கு எந்தத் தொடர்புமற்ற ஒரு பிஞ்சுயிரின் மாசற்ற அப்பாவித்தனம் இரக்கமின்றி நசுக்கப்பட்டதன் சான்றாகும்.
இறுதிப்போரை வெற்றியாகக் கொண்டாடிய மகிந்தவின் அரசியல் பிம்பம், பதுங்கு குழியில் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளின் மூலம் சர்வதேச அளவில் குற்றவாளியாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
அரச அதிகாரத்தின் உச்சத்தில் ஆயுத பலத்தோடு மகிந்த நின்றபோது எந்தப் பாதுகாப்பும் அற்று இறுதி நிமிடங்களில் தவித்துப் போன ஒரு அனாதைச் சிறுவனாகப் பாலச்சந்திரன் மரணத்தைத் தழுவினார்.
மகிந்தவின் அரசியல் சாம்ராஜ்யம் தற்காலிக வெற்றிகளைக் கண்டாலும் பாலச்சந்திரனின் மரணம் ஈழத் தமிழர்களின் மீதான போர்க்குற்றங்களின் ஆகச்சிறந்த, நெஞ்சை உலுக்கும் அழியாத சாட்சியாக இன்றும் உலக அரங்கில் நீதி கேட்டு நிற்கிறது.
இதனை நினைவூட்டும் வகையில் மகிந்த ராஜபக்ச ஒரு குழந்தையை ஏறெடுத்து பார்க்கின்ற புகைப்படமொன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை போலதான் யாதுமறியாத பாலச்சந்திரனும்.
அந்தச் சிறுவனின் மரணம் மகிந்த ராஜபக்சவின் போர்க்காலத் தலைமை மற்றும் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நிகழ்ந்த உலக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கறையாக மாறியுள்ளது.
இது குறித்து ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |