திருகோணமலை விவகாரம்: தலைமறைவாகியுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர், நீதிமன்றம் அழைப்பாணை!

CID - Sri Lanka Police Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation
By Kanooshiya Nov 24, 2025 08:14 AM GMT
Report

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கஸ்ஸப தேரரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன், இன்று (24.11.2025) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது நடைபெற்ற குழப்பமான சூழல் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்க மறுத்ததால், இது தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர்.

பார்வையாளர்களுக்காக றீ(ச்)ஷா அறிமுகப்படுத்தியுள்ள ReeCha App

பார்வையாளர்களுக்காக றீ(ச்)ஷா அறிமுகப்படுத்தியுள்ள ReeCha App

பி அறிக்கை

நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்த திருகோணமலை காவல்துறையினர் 16 ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை விவகாரம்: தலைமறைவாகியுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர், நீதிமன்றம் அழைப்பாணை! | Balangoda Kassapa Thero Proceed In Court

அதன்படி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 184 இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது அனைத்து குடிமக்களின் கடமை என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காததால் தேரருக்கு எதிராக அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பலாங்கொட கஸ்ஸப தேரரின் தற்போதைய வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால்,தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கான பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு தனியார் தொலைபேசி நிறுவனத்தின் மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் பெறும் தரப்பு

60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் பெறும் தரப்பு

இலங்கை காவல்துறைக்கு நாமல் மறைமுக அச்சுறுத்தல்! சர்ச்சையை கிளப்பிய நுகேகொடை பேரணி

இலங்கை காவல்துறைக்கு நாமல் மறைமுக அச்சுறுத்தல்! சர்ச்சையை கிளப்பிய நுகேகொடை பேரணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026