உள்ளூராட்சி மன்ற தேர்தல்:வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Local government Election
Sri lanka Post
By Sumithiran
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை வீடு வீடாக விநியோகிக்கும் நடவடிக்கை நாளையுடன்(29) முடிவடையும் என்று பிரதி தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்தார்.
வாக்குச் சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள்
நாளை (29)அதிகாரபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அவற்றைப் பெறலாம். அதற்கான வாய்ப்பு மாலை 4 மணி வரை இருக்கும் என்று பிரதி தபால் மா அதிபர் தெரிவித்தார்.
மே 6 ஆம் திகதி, தேர்தல் நடைபெறும் நாள். இதற்கிடையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில் அஞ்சல் வாக்குப்பதிவு நாளையுடன் முடிவடைய உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்