கனடாவின் பிரதமர் தேர்தல் இன்று - வெற்றி வாய்ப்பு யாருக்கு தெரியுமா..!
அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) விலகிய நிலையில், இன்று கனடாவில் (Canada) பிரதமரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் இடம்பெற்று வருகிறது.
இதன்படி, தேர்தலில் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் பியர் பொய்லிவ்ரேவிற்கும் (Pierre Poilievre) இடையேபோட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் தற்போது லிபரல் கட்சியின் ஆட்சி நடைப்பெற்று நடைபெற்று வருவதுடன், பிரதமராக மார்க் கார்னே பதவி வகித்து வருகிறார்.
ட்ரூடோவின் பதவி விலகல்
இவருக்கு முன்னதாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவி வகித்து வந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புக்கள் மற்றும் சர்ச்சைகளின் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, லிபரல் கட்சிக்கு புதிய தலைவராக மார்க் கார்னி பொறுப்பேற்று, பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிப்பதற்கும், அமெரிக்க, கனடா வர்த்தகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும், மக்களின் முழு ஆதரவைப் பெற்ற அரசு வேண்டும் என்று வலியுறுத்திய மார்க் கார்னி, ஏப்ரல் 28, 2025 அன்று பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரையை முன்வைத்தார்.
கருத்துக் கணிப்பு
இந்த நிலையில், கனடாவில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது, கனடாவில் வாக்களிக்க தகுதியுடைய 28 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் ரைடிங்ஸ் என்றும் அழைக்கப்படும் 343 தனிப்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடந்து வந்த கருத்துக் கணிப்புகளில் பிரதமர் கார்னி சிறிது முன்னிலை வகிப்பதாகவும், பியர் பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி சமீபத்திய நாட்களில் பின்தங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தேர்தல் வாக்குப்பதிவைத் தொடர்ந்து, முதல்கட்ட முடிவுகள் கனேடிய நேரப்படி மாலை 7 மணி முதல் மாலை 7:30 மணிக்குள் வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
