பெரும் விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் பயணித்த ஒருவர் எழுதிய கடிதம் பிரித்தானியாவில் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
கேணல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய கடிதம் 300,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐந்து மடங்கு விலை
அந்தக் கடிதம் 60,000 பவுண்டுகளுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதை விட ஐந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடிதத்தை பெயர் குறிப்பிடாத ஒருவர் வாங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டைட்டானிக் விபத்து
கேணல் ஆர்ச்சிபால்ட் கிரேசியின் ஏப்ரல் 10, 1912 திகதியிடப்பட்ட இந்த கடிதம் வெளியான ஐந்து நாட்களுக்குப் பிறகு, டைட்டானிக் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
அதன்போது, கப்பலில் இருந்த சுமார் 2,200 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 1,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
