தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 7,000 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட மட்டத்தில் கண்காணிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் வாரத்தில் மாவட்ட மட்டத்தில் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

