பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்
பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் (Pakistan) மாகாணம் அல்ல விடுதலை பெற்று விட்டதாகவும் பலூச் தலைவர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பல ஆண்டுகளாக தனி நாடாக ஆக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறது.
குறித்த அறிவிப்பை பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்
பதிவில் மேலும் குறிப்பிடுகையில், '1947 ஒகஸ்ட் 11ல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம்.
இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம்.
நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும்.
பலுசிஸ்தானின் தூதரகத்தை டில்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐ.நா.வும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என கூறி உள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
