வெளிநாட்டு பிரஜையிடம் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெற்ற காவல்துறையினர் கைது
இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறையினருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி (Bambalapitiya) காவல்துறையின் ஒரு காவல்துறை சார்ஜென்ட் மற்றும் ஒரு காவல்துறை சாரதி ஆகியோருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (21) பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த காவல்துறையினர், மேற்படி வெளிநாட்டு பிரஜை முச்சக்கர வண்டியில் பயணித்த போது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, வெளிநாட்டு பிரஜையின் பையை சோதனை செய்து இரண்டு வெளிநாட்டு சிகரெட்டுகளை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு, இரண்டு மின்னணு சிகரெட்டுகளையும் ரூபாய் 30,000 பணத்தையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணி
இதையடுத்து குறித்த வெளிநாட்டு பயணி காவல்துறையில் முறைப்பாடு அளித்ததையடுத்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்பின்பு, காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், வரும் 25 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் அதே நாளில் அடையாள அணிவகுப்புக்கு முன்னலைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த பணத்தை பலவந்தமாகக் கோரி பெற்றதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
