பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை
சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தற்சமயம் பெரும் சிக்கலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிவப்பு அறிவித்தல் காரணமாக, இரட்டை குடியுரிமை கொண்ட பசில் அமெரிக்காவில் இருந்து வேறு எந்த நாட்டிற்கும் தப்பிச் செல்ல முடியாதவாறு அமெரிக்காவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பசில் ராஜபக்சவிற்கு எதிராக இலங்கையில் 4 நீதிமன்ற பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முறைகேடாகப் பயன்படுத்திய அரசாங்க நிதி
அத்துடன் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை மற்றும் இன்டர்போல் மூலம் சர்வதேச சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவை அமெரிக்க நீதித்துறை மற்றும் வெளியுறவுத்துறையுடன் இணைந்து அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |