இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு பெயரிடத் தடை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு பெயரிடுவதைத் தடை செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தனிநபர் உறுப்பினர் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரேரணை பட்டியலிடப்பட்டுள்ளதுடன் இதன்போது 8 தனிநபர் உறுப்பினர் பிரேரணைகள் விவாதிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலின்படி, இன அல்லது மத அடையாளங்களை வலியுறுத்தும் பெயர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்த தனிநபர் பிரேரணையின் நோக்கம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்
அரசியலின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் இனத்தைக் குறைக்கும் ஒரு தேசிய அடையாளத்தை இது ஊக்குவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இன அல்லது மத அடிப்படையில் பெயரிடப்பட்ட அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு முன்னர் தீர்மானித்திருந்தது.
தற்போது பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள் அத்தகைய மத அல்லது இன அடிப்படையில் பெயரிடப்பட்டிருந்தால் அவற்றைத் திருத்தவும், அவற்றைத் திருத்துவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கவும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
