யாழ் - பருத்தித்துறை பகுதியில் இதற்கு முற்றாக தடை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் லஞ்ச் சீற் பாவனையை தடை எனவும் பதிலீடாக வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்துவதற்கான தடை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
முன்னதாக, உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கை
குறித்த அறிவிப்பை மீறிச் செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தினூடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், லஞ்ச் சீட்டுக்கு பதில் வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலைகளை உணவு பொதியிடலுக்கு பயன்படுத்துமாறு பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |