இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவல் - நீக்கப்படுகிறது தடை
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அதிருப்தியடைந்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று அங்கத்துவத்தை இடைநிறுத்தியிருந்தது.
எனினும் இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சு அளித்த பதிலை அடுத்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தடையைநீக்கவுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவிப்பு
இந்த தீர்மானம் நேற்று (27) எடுக்கப்பட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி நடைபெறும் என விளையாட்டு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
தொடர்ந்தும் அவதானம்
எனவே இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினக் செயற்பாடுகள் தொடர்பில் அவதானித்து வருவதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 6 மணி நேரம் முன்
