டரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு : ஆட்டம் காணவுள்ள இலங்கையின் முக்கிய தொழில்துறை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் (Anton Marcus) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆடைத்தொழில்துறை
அத்துடன் அமெரிக்காவின் புதிய வரி காரணமாகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நேரிடும் என என்டன் மாகஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து உரியத் தீர்வை பெற்று தருவது அவசியமாகும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அது தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு உரிய பதிலை வழங்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் புதிதாக முன்மொழியப்பட்ட வரிகள் நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையை கணிசமாக சீர்குலைத்து ஆயிரக்கணக்கான வேலைகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று கூட்டு ஆடை சங்க மன்றம் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 8 மணி நேரம் முன்
