அநுர அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

International Monetary Fund M A Sumanthiran IMF Sri Lanka National People's Power - NPP
By Sathangani Apr 05, 2025 03:15 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்த பின்னர் மீறப்பட்ட வாக்குறுதிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) பட்டியலிட்டுள்ளார்.

யாழில் நேற்று (4) நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால ஆட்சிக்கு இதுவரையிலான ஆறுமாத கால நடவடிக்கைகள் முன்னுதாரணம் என குற்றம் சாட்டினார்.

மேலும் தெரிவித்த அவர், "தேசிய மக்கள் சக்திக்கு கடந்த தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிகள் ஊடாக உண்மையாகவே மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறதா இல்லையா என்று சில மாதங்களிலேயே புரிகிறது.

மோடியின் வருகைக்கு காத்திருக்கும் சுமந்திரன் : ஆராயப்படவுள்ள விடயங்கள்

மோடியின் வருகைக்கு காத்திருக்கும் சுமந்திரன் : ஆராயப்படவுள்ள விடயங்கள்

சர்வதேச நாணய நிதியம்

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தோடு (IMF) எந்தவித தொடர்பும் இருக்கக்கூடாது என்று கொள்கையளவிலே உறுதியாக இருந்தவர்கள் பதவிக்கு வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையை தொடர்கிறார்கள்.

அநுர அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால் | Imf Employees Provident Fund

தேர்தலுக்கு முன்பு சொன்னது போன்ற சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களில் எவ்வித மாற்றங்களையும் அவர்கள் கோரவில்லை.

ஊழியர்களுடைய சேமலாப நிதியை மட்டுமே பயன்படுத்தி உள்ளூர் நிதி மறுசீரமைப்பு மேற்கொண்டதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள், எவ்வித மாற்றமும் இன்றி அதே முறைமையின் மீது ஏறி நின்று ஆட்சி செய்கின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவோம் என்று எழுத்திலே உறுதியளித்தவர்கள். பிரதியீடுகளற்ற முழுமையான சட்ட நீக்கத்திற்காக குரல் கொடுத்தவர்கள், இப்பொழுது இன்னுமொரு சட்டத்தை இயற்றுவதாக சொல்கிறார்கள்.

தம்முடன் இணையாத தமிழ் கட்சிகளை உதிரி கட்சிகள் என விமர்சித்த சுமந்திரன்

தம்முடன் இணையாத தமிழ் கட்சிகளை உதிரி கட்சிகள் என விமர்சித்த சுமந்திரன்

நிலமெல்லாம் விடுவிக்கப்படும் 

நிலமெல்லாம் விடுவிக்கப்படும் என உறுதியளித்தார்கள். இன்றுவரை ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படவில்லை.

அநுர அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால் | Imf Employees Provident Fund

அரசியல் கைதிகள் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகத்துக்கு இந்த வரவுசெலவுத் திட்டத்தில் எதுவித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.

இவர்களது ஆட்சியின் ஆறு மாத காலம் என்பது மிக நீண்ட காலம். இந்த ஆறுமாத காலம் தான் இவர்களது ஆட்சியிலான ஐந்து வருடங்களும் எப்படி அமையப்போகிறது என்பதற்கு முன்னுதாரணம் எனத் தெரிவித்துள்ளார்.  

ட்ரம்ப்பின் வரி விதிப்பு: அநுர அரசாங்கத்திற்கு துணையாக வந்த நாமல்

ட்ரம்ப்பின் வரி விதிப்பு: அநுர அரசாங்கத்திற்கு துணையாக வந்த நாமல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்