அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது இரகசிய வான்வழித் தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் கடந்த நவம்பர் 2ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களாக அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வந்த, இதுவரை பகிரங்கமாக அறிவிக்கப்படாத தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துல்லிய தாக்குதல்
இந்நிலையில், நேற்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், “அது ஒரு சிறிய தாக்குதல் மாத்திரமே. அது போர் அல்ல. ஈரான் விமான எதிர்ப்பு பாதுகாப்பு நிலையம் ஒன்றை அமைத்திருந்தது.
அதனை நிர்மாணிக்க அவர்களுக்கு சுமார் இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன. நாங்கள் அதன் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.
அது முழுமையடைந்ததும் நேற்றிரவு மிகத் துல்லியமாகத் தாக்கினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னரும் அமெரிக்க இராணுவம் ஈரான் மீது சில வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் 'Air & Space Forces Magazine' இதழுக்குத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றுள்ளதுடன், விமானஎதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இராணுவக் கட்டமைப்புகள் இலக்குவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |