இராணுவ நடவடிக்கையோ போரோ அல்ல:அமெரிக்கா செய்தது போர்க்குற்றம்:ஈரானின் நீதித்துறை அமைச்சர் காட்டம்
ஈரானின் மினாப் மற்றும் லமெர்ட் நகரங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்கதல்கள் போர்க்குற்றங்கள் ஆகும் என ஈரானிய நீதித்துறை அமைச்சர் அமின் ஹொசைன் ரஹிமி தெரிவித்துள்ளார்.
"சர்வதேச சட்டத்தின் கீழ், பெண்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று ரஹிமி கூறியதாக ஈரானிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் "சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கை அல்லது போர் ஆகாது" என்று ரஹிமி மேலும் தெரிவித்துள்ளார்.
150 பேர் உயிரிழப்பு
2026 பெப்ரவரி 28 ஆம் திகதியன்று மேற்குறித்த ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

மினாப்பில் உள்ள ஷஜாரே தய்யிபா என்ற முன்பள்ளி மீது நடத்தப்பட்ட 'டோமாஹாக்' ஏவுகணைத் தாக்குதலில் 120 குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதேபோல் லமெர்ட்டில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |