கொழும்பில் ஈரானிய தூதுவர் இல்ல சுவரை உடைத்த சொகுசு கார்: விசாரணை தீவிரம்

Sri Lanka Law and Order Arrest
By Shalini Balachandran Nov 03, 2026 06:10 AM GMT
Report

கொழும்பில் அமைந்துள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கார் ஒன்று நுழைந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வெறும் வீதி விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட செயலா என்பதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் கடந்த அக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றிருந்தது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு

விரிவான ஆய்வுகள்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இச்சம்பவத்தின் தீவிரத்தன்மை குறித்துக் குருந்தவத்தை காவல்துறையினரால் கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் விரிவாகக் விவரிக்கப்பட்டது.

கொழும்பில் ஈரானிய தூதுவர் இல்ல சுவரை உடைத்த சொகுசு கார்: விசாரணை தீவிரம் | Crash At Iranian Envoy Home 4 Suspects Bailed

இந்தநிலையில், விபத்திற்குள்ளான சொகுசு காரில் ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இச்சோதனைகளுக்காக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர், காவல்துறை விசேட அதிரடிப் படையின் (STF) வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் காவல்துறை மோப்ப நாய் பிரிவு ஆகியவற்றின் உதவிகள் பெறப்பட்டு விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

'டுபாய் தனுஷ்க' வின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளர் கைது

'டுபாய் தனுஷ்க' வின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளர் கைது

முன்னிலையான சட்டத்தரணிகள் 

சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் நான்கு சந்தேகநபர்களும் குருந்தவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கொழும்பில் ஈரானிய தூதுவர் இல்ல சுவரை உடைத்த சொகுசு கார்: விசாரணை தீவிரம் | Crash At Iranian Envoy Home 4 Suspects Bailed

இந்தநிலையில், குறித்த வழக்கு  வழக்கு நேற்று (02-11-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இச் சம்பவம் காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட ஒரு சாதாரண வீதி விபத்து மட்டுமே என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கிய 21 வெளிநாட்டவர்கள்!

மத்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கிய 21 வெளிநாட்டவர்கள்!

உண்மைத் தன்மை

அத்துடன், சம்பவத்தின் உண்மை நிலையை விளக்குவதற்காகச் சந்தேகநபர்களின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள ஈரானியத் தூதுவரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ஈரானிய தூதுவர் இல்ல சுவரை உடைத்த சொகுசு கார்: விசாரணை தீவிரம் | Crash At Iranian Envoy Home 4 Suspects Bailed

முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருதுகோள்களையும் பரிசீலித்த மேலதிக நீதவான், கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இருப்பினும், இச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துவதற்காக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை உள்ளிட்ட விசாரணைகளின் மேலதிக முன்னேற்றங்களை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குருந்தவத்தை காவல்துறையினருக்கு மேலதிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் - மன்னார் வீதியில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருட்கள்!

யாழ் - மன்னார் வீதியில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருட்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி