பிரதமர் ஹரினியின் ஆடை: வெடித்தது சர்ச்சை
பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya) வெளிநாடு செல்லும் போது அணிந்து சென்ற ஆடை தொடர்பில் சர்ச்சை வெடித்துள்ளது.
நாட்டின் பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் இவ்வாறு ஆடை அணிந்து செல்வது நாடு என்ற வகையில் ஏற்புடையதல்ல என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க(duminda dissanayake) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி அல்லது பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்பவர்கள் இதை விடவும் சீரான முறையில் ஆடை அணிந்து சென்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஹரினியின் ஆடை முறை
எனினும், பிரதமர் ஹரினியின் ஆடை முறை மற்றும் அவரது எளிமைத்தன்மை தனிப்பட்ட ரீதியில் தமக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஹரினி ஆடை அணியும் விதத்தை நான் விரும்புகின்றேன் அவர் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் விதம் எனக்கு பிடிக்கும் என இன்றைய தினம்(04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் ஹரினி பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தபோது இவ்வாறான ஆடைகளை அணிந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 4 மணி நேரம் முன்
