வாக்குச் சீட்டை புகைப்படம் எடுக்க தடை : வெளியான அறிவிப்பு
பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
நாளை (14) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆணைக்குழுவினால் இன்று (13) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக கணக்குகள்
எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைத்தள கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போதும் விருப்பு வாக்குகளை வழங்கும் போதும் புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் வாக்காளர் அட்டை பெறாமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |