வெசாக் அலங்காரங்களில் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை: வெளியானது வர்த்தமானி
Vesak Full Moon Poya
Sri Lanka
Plastic
By Shalini Balachandran
வெசாக் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாமென மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொது மக்களிடம் கோரியுள்ளது.
வெளியிட்ட வர்த்தமானி
அத்தோடு, கடந்த 2017 ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் பிரகாரம் பொலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட வெசாக் அலங்காரங்கள் பல காணப்படுவதாகவும், அதற்கு மாற்றீடாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பல பொருட்கள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்துமாறு அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி