கட்டுநாயக்க விமானநிலையம் மூடப்படுமா? வெளியானது அரசின் அறிவிப்பு
srilanka
corona
prasannaranathunga
bandaranayake airboat
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்றின் சேகம் அதிகரித்துள்ள போதிலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தாண்டவம் ஏற்பட்டுள்ள இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை விசேட திட்டத்தின் ஊடாக தனிமைப்படுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு விமான நிலையத்தை மூடிவிட்டு பயணிகளுக்காக மாத்திரம் திறந்து வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்