தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையும் ஆற்றப்பட்டிருந்தது.
இறுதித் தமிழ் குறுநில மன்னன்
இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள் பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆங்கிலேயர் கைப்பற்றுவதற்கு முன், அதனை சுதந்திரமாக ஆட்சி செய்த இறுதித் தமிழ் குறுநில மன்னன் பண்டாரவன்னியனின் ஆவார்.
வன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்த ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரின் ஆதிக்கத்தையும், அவர்களின் வரி வசூலிப்பையும் இவர் கடுமையாக எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை பண்டாரவன்னியனின் கொண்டுள்ளார்.
1803 ஆகஸ்ட் 25 அன்று முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயக் கோட்டையை தாக்கி, அங்கிருந்த பீரங்கிகளைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி இந்த மன்னனுக்கு சொந்தமானது.

மேலும், பிரித்தானியத் தளபதி வொன் டிறிபேர்க் தலைமையிலான பெரும் படையுடன் கச்சிலமடு என்ற இடத்தில் நடந்த இறுதிப் போரில் இவர் தீரத்துடன் போரிட்டார்.
ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு எதிராகத் தன் தாயக விடுதலைக்காகப் போராடி, 1803 அக்டோபர் 31 அன்று தனது உயிரைத் தியாகம் செய்தார்.
வன்னி மக்களின் சுதந்திரத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவரை, இலங்கை அரசு 1982 ஆம் ஆண்டு 'தேசிய வீரன்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கௌரவித்தது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |