பந்துல குணவர்தனவின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி
srilanka
corona virus
bandula
gunawardane
By Vasanth
வர்த்தக அமைச்சின் செயலாளர் சந்திரானி ஜயவர்தனவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது வெளிவந்த முடிவுக்கு அமைய தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த சில தினங்களாக அமைச்சிற்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் அமைச்சரிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு இன்று மாலை வெளிவரும் எனறும் தெரிவிக்கப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி