சிறிலங்காவிற்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள உறுதி!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் இம்ரான் கான் மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் தங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இச்சந்திப்பானது நேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம் என பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பந்தல குணவர்த்தன கருத்து வெளியிடுகையில்,
பௌத்த சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தாம் உள்ளிட்ட வர்த்தக குழுவினருக்கு வழங்கிய வரவேற்பிற்கு நன்றி செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Minister of Trade of Sri Lanka, Dr. Bandula Gunawardhana (@BandulaDr) and State Minister for Regional Cooperation, Mr. Tharaka Balasuriya (@TharakaBalasur1) paid a courtesy call on Honorable Prime Minister @ImranKhanPTI today. pic.twitter.com/KsG7rnmFQS
