பூண்டுலோயாவில் பேருந்து விபத்து - 24 பேருக்கு காயம்
பூண்டுலோயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் இன்று (09) மாலை வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த 24 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பூண்டுலோயா வேவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்திற்கு பணிபுரிய சென்றவர்கள் பணியை முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்தில் வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னம்பிடிய விபத்து
இதேவேளை, பொலன்னறுவை – மன்னம்பிடிய, கொட்டளி பாலத்திற்கு அருகில் சற்றுமுன் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்