பங்களாதேஷில் கோர விபத்து - பேருந்து குடைசாய்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு (படங்கள்)
Sri Lanka Police
Accident
By pavan
பங்களாதேஷின் - பரிஸ்ஹல் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 35 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம்

பேருந்தின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்து அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி