வன்முறைகளால் பற்றி எரியும் பங்களாதேஷ்: பின்னணியில் சீனா பாகிஸ்தான் கூட்டு சதி
பங்களதேஷில் (Bangladesh) இடம்பெறும் வன்முறை மற்றும் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina ) ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்ட செயற்பாடுகளின் பின்னனியில் சீனா (China), பாகிஸ்தானின் (Pakistan) உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பில் இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலின் பிரகாரம், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத் துறை ஆகியவை பங்களாதேஷில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் அமைப்பு
இந்தியாவுக்கு ஆதரவாக உள்ள ஷேக் ஹசீனாவுக்கு பதிலாக பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பங்களதேஷின் தேசியவாத கட்சியை (பி.என்.பி.) ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன.
பி.என்.பி. கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையிலான கூட்டத்தின் போது "பங்களதேஷின் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவி பேகம் கலீதா ஷியாவை உடனடியாக விடுவிக்க ஒருமனதாக முடிவு செய்ததாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு திங்களன்று வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |