கட்டுநாயக்கவில் தரையிறங்கிய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி
SriLankan Airlines
Bandaranaike International Airport
Sri Lanka
Bangladesh Cricket Team
By Sumithiran
ஒருநாள் மற்றும் ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் மூன்று ரி 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர், அந்த போட்டிகள் எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற உள்ளன.மேலும், மூன்று ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டிகள் கொழும்பு பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறும் வகையில்
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறும் வகையில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில்
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் 04/25 அன்று பங்களாதேஷின் டாக்காவிலிருந்து UL-190 என்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி