இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
dollar
trouble
bankcards
account-holders
By Sumithiran
நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்தக் கணக்குகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்வதற்குத் தேவையான அட்டைகளை வழங்குவது பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அட்டை காலாவதியான நிலையில் புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாததாலும், புதிய அட்டைகளைப் பெற முடியாததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக அட்டைகளை இறக்குமதி செய்வதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.