மின்சாரம் தாக்கியதில் வங்கி ஊழியர் உயிரிழப்பு!
கம்பஹா - நீர்கொழும்பு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (16) இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் நீர்கொழும்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், தனது வேலை நிமித்தம் நீர்கொழும்பு பகுதியில் வாடகைக்கு வீட்டில் தங்கியிருந்தார்.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில் நேற்றிரவு அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்த பழுதடைந்த மின்விசிறியைத் திருத்த முற்பட்ட போதே மின்சாரம் தாக்கியதில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |