தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளை - உக்ரைன் தம்பதியினருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட உக்ரேனிய பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று முன்தினம் (17) பிணை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளை பிரவேசித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
வெளிநாடு செல்வதற்கு தடை

சந்தேகநபர் பின்னர் இரண்டு தடவைகளில் உக்ரேனிய பெண்ணுக்கு சொந்தமான பிரமிட் மோசடி கணக்குகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு பணத்தை வைப்புச் செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
உக்ரேனிய பெண்ணுக்கு பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடு செல்வதற்கு மேலும் தடை விதித்ததுடன், தலா 10,000,000 ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளையும் வழங்க உத்தரவிட்டார்.