தடையின்றி வங்கிச் சேவைகளை வழங்குக - வெளிவந்த அறிவிப்பு
people
bank-service-lockdown
All-licensed-banks
CBSL
By Vanan
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தடையின்றி வங்கிச் சேவைகளை வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி, அங்கீகாரம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்துள்ளது.
தமது வங்கிச் சேவைகள் தொடர்பாக உரிமம் பெற்ற தனியார் வங்கிகளால் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அடுத்தே மத்திய வங்கி தமது அறிவுறுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் அத்தியாவசிய சேவை என்ற வகையில் அங்கீகாரம் பெற்ற வங்கிகள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வங்கி கிளைகளை திறந்து வைத்து தமது வாடிக்கையாளர்களுக்கு இடையூறற்ற சேவைகளை வழங்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்