பயங்கரவாத தடைப்பட்டியலில் தமிழர்களின் பெயர்கள்! வெளியிடப்பட்ட வர்த்தமானி
ஐக்கிய நாடுகள் சட்டம், எண் 45 - 1968ன் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2470/19ன்படி, 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் விதிமுறைகள் எண் 1 இன் விதி 4(7)க்கு உட்பட்டதாக முன்பு வெளியிடப்பட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய திருத்தப்பட்ட பட்டியல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட பட்டியல், 2025 மே மாதத்தில் இறுதியாக புதுப்பிக்கப்பட்டிருந்த பட்டியலை மாற்றுகிறது என்றும், வர்த்தமானி வெளியிடப்பட்ட உடனே உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல்
இந்த அறிவிப்பு, ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அரசாங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடையதாக, திருத்தப்பட்ட பயங்கரவாத தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான அனைத்து நிதி, நிதி சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை உறைய வைக்கும் (freeze) உத்தரவும் ஐக்கிய நாடுகள் விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவும், தகுதியான அதிகாரி (Competent Authority) என்ற வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட பட்டியல், உரிய அதிகாரத்தின் கீழ் வெளியிடப்பட்டதாகவும், அதிகாரப்பூர்வ அரச தளங்கள் மூலம் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கக்கூடியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |