பார் லைசன்ஸ் விவகாரம் : சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட சவால்

Jaffna M A Sumanthiran Sri Lanka Podujana Peramuna ITAK General Election 2024
By Sumithiran Oct 28, 2024 04:04 PM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் பார் லைசன்ஸ் பெற்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். இது அந்தக் கட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் போக்குவதற்கு சத்தியக் கடதாசியை உடனடியாக வழங்கி கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் (m.a.sumanthiran)முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும்.”என சிறிலங்கா பொது ஐன பெரமுனவின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் (Geetanath Kasilingam)சவால் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று(28) நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்ட சவாலை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

 சத்தியக்கடதாசி சமர்ப்பணம்

“பார் லைசன்சோ, சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் நான் பெற்றுக் கொடுக்கவில்லை எனச் சத்தியக் கடதாசி ஒன்றை அண்மையில் கொடுத் திருந்தேன். அதேபோல் என்னுடைய சக வேட்பாளர்கள் இதில் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்தியக் கட தாசியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற பார் லைசன்ஸ் விவகாரத் தில் யார், யார் இதனைப் பெற்றுக் கொடுத்தார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.

பார் லைசன்ஸ் விவகாரம் : சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட சவால் | Bar License Issue Challenge To Sumandran

ஏனெனில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தாங்களாக தங்களுக்குத் தேவையானவர்களைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பியிருந்தார்கள். அவ்வாறு இவர்களை நாடாளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல.

பதவி வெறிக்காக சுமந்திரனுக்கு விலைபோன தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் : கடுமையாக சாடும் தவராசா

பதவி வெறிக்காக சுமந்திரனுக்கு விலைபோன தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் : கடுமையாக சாடும் தவராசா

 வாக்களித்த மக்களுக்குக் கட்டாயம் தெரிய வேண்டும்

ஆகவே, யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்குக் கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்தத் தயங்குகின்ற நிலைமைதான் உள்ளது. ஆனாலும், இவர்கள் ஏன் தயங்கு கின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.

பார் லைசன்ஸ் விவகாரம் : சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட சவால் | Bar License Issue Challenge To Sumandran

இதனாலேயே இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை என சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனாலும், இதுவரைக்கும் எவரும் அப்படியான சத்தியக் கடதாசியை கொடுத்ததாகக் காணவில்லை.

மகிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸுக்கு அமைச்சுப் பதவி இல்லை! அநுர தரப்பு உறுதி

மகிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸுக்கு அமைச்சுப் பதவி இல்லை! அநுர தரப்பு உறுதி

சாராயக்கடை தொடர்பில் நாளாந்தம் கதைக்கும் சுமந்திரன்

இவ்வாறான நிலைமையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்க்கின்றபோது சாரயக் கடை சம்பந்தமாக முன்னாள் எம்.பி. சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார். உண்மையில் எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்துத்தான் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில்தான் நாங்களும் சில அரசியல் விடயங்களைப் படித்துக் கொள்கின்றோம். ஆகவே, அவர் எங்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரிதான். ஏனெனில் நாங்கள் இப்போதுதான் புதிதாக அரசியலுக்குள் வந்திருக்கின்றோம். அவர் எங்களை விட மூத்த கௌரவமான அரசியல்வாதி. அதனால் அவரைப் பெரும் மரியாதையோடு பார்க்கின்றோம்.

பார் லைசன்ஸ் விவகாரம் : சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட சவால் | Bar License Issue Challenge To Sumandran

எனவே, நாம் கேட்டது போல அவர் ஒரு முன்மாதிரியாக ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர். அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக் கொடுக்கச் சொல்லிக்கேட்கலாம்.

சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில!

சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில!

ஏனெனில் அவருடன் அரசியல் செய்பவர்கள்தான் இம்முறை அந்தக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலும் கேட்கின்றார்கள். ஆகவேதான் இதனை முன்மாதிரியாகச் செய்யுங்கள் என சுமந்திரனை மரியாதையுடன் கேட்கின்றோம். ஏனெனில் வாக்களித்த மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அதாவது பார் லைசன்ஸ் வாங்கினார்களா? இல்லையா? என்பது தெரிய வேண்டும். அதைவிடுத்து யாரையும் சேறு பூசுவது எங்களது நோக்கமும் அல்ல.

தமிழரசுக் கட்சியை களங்கம் இல்லாததாக காட்ட வேண்டிய பொறுப்பு

இவ்வாறு சத்தியக் கடதாசியை வெளிப்படுத்தியதன் பின்னர் யாரும் பார் லைசன்ஸ் வாங்கினார்களா? இல்லையா? என்று உண்மை தெரிய வந்ததன் பின்னர் மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். அதனால்தான் சுமந்திரனை மிக மரியாதையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால் உங்கள் கட்சியை களங்கம் இல்லாத கட்சியாகக் காட்ட வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்றபடியால் நீங்கள் இதனைச் செய்யுங்கள்.

பார் லைசன்ஸ் விவகாரம் : சுமந்திரனுக்கு விடுக்கப்பட்ட சவால் | Bar License Issue Challenge To Sumandran

நாங்கள் கிராமங்கள் தோறும் மக்க ளிடம் செல்கின்றபோது தமிழரசுக் கட்சி ஆட்கள் பார் லைசன்ஸ் வாங்கியதாகத்தான் சொல்கின்றார்கள். உங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்தக் களங்கத்தைப் போக்குவதற்கான ஒரேயொரு நபர் நீங்கள்தான். உங்களால்தான் இந்தக் களங்கத்தைப் போக்க முடியும். ஆகவே, சத்தியக் கடதாசியைக் கொடுத்து முன்மாதிரியாகச் செயற்படுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.” - என்றார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020