மறுக்கப்படும் சுகாதார தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் - யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள் நலன்புரி சங்கம் குற்றச்சாட்டு
வடமாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள் நலன்புரி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் செயலாளர் நாகராசா ஜீவிதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு நலன்சார் திட்டங்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகள்

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ இதன் காரணமாக அனேகமானோர் மன உளைச்சலுக்கும், உடல் ரீதியிலான தாக்கங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
மேலும், திண்மகழிவு அகற்றும் ஊழியர்களுக்கான எவ்விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லமையால் அனேகமான தொழிலாளர்கள் உடல் ரீதியிலான அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்” என்றார்.