கோட்டாபயவைத் தொடர்ந்து அமெரிக்க செல்லும் பசில் ராஜபக்ச!
தனிப்பட்ட பயணமாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விடயம் எதுவும் உத்தியோக பூர்வமாக இதுவரையில் வெளிவரவில்லை.
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்துவிட்டு, விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே அவர் இந்தியா சென்று வந்தமை பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த அமெரிக்கா பயணம் அமைந்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரவு - செலவுத்திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் தனிப்பட்ட தேவைக்காக சிங்கப்பூர் பயணமாகியுள்ள நிலையில் தற்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் தனிப்பட்ட தேவை காரணமாக அமெரிக்க செல்லவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
