மொட்டுக்கட்சிக்குள் பிளவு! ரணிலை சந்திக்க அவசர அவசரமாக நாடு திரும்பினார் பசில்
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (மார்ச் 05) காலை நாடு திரும்பினார்.
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு, அவர் மீண்டும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பசில் ராஜபக்ச, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்தார்.
தனது தனிப்பட்ட விடுமுறையை நிறைவு செய்து, அவர் தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் பிளவு
அதிபர் வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பசில் அவசரமாக நாடு திரும்பியதாகவும் அவசர அவசரமாக ரணிலை சந்திக்கவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பசிலுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அவரை வரவேற்க பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |