பசிலை சிறையில் அடையுங்கள் -கொதித்தெழுந்த தேரர்
Colombo
Athuraliye Rathana Thero
Basil Rajapaksa
By Sumithiran
பசில் ராஜபக்சவை சிறையில் அடைக்க வேண்டும்
நாட்டிற்கு இழைத்த குற்றத்திற்காக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சிறையில் அடைக்க வேண்டும் என எமது மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் (12) நடைபெற்ற மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குடும்ப அரசியலை முன்னின்று வழிநடத்தியவர் இன்று வெளியேறியுள்ளதாகவும், இவ்வாறான விடயங்களை செய்த ஒருவர் இவ்வாறு வெளியேற முடியுமா என கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரித்துக்கொண்டே வீட்டுக்குச் சென்றார்
தற்போது தமக்கு எந்த பொறுப்பும் இல்லை என தெரிவித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இன்று நாட்டில் தம்மைப் பற்றி எந்த பேச்சும் இல்லை என்று சிரித்துக்கொண்டே , அவர் வீட்டுக்குச் சென்றதாகவும் ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.
