கற்களுக்கு மத்தியில் சடலமாகக் கிடந்த நபர்- பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் வீட்டு சுற்று மதில் இடிந்து வீழ்ந்ததில் மண்டூர், முதலாம் பிரிவைச் சேர்ந்த பேரின்பராஜா பேணுஜன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் ஞாயிற்றுக்கிழமை இரவு இரவுச்சாப்பட்டை முடித்து விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் திங்கட்கிழமை அதிகாலை வீட்டார் அவரின் வீட்டுக்கு பின்னால் உள்ள சுற்று மதில் பக்கம் சென்ற போது சுற்று மதில் உடைந்த நிலையில் கற்களுக்குள் சிக்குண்டு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.