ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்ட கிழக்கு ஆளுநர்- சூடு பிடிக்கத்தொடங்கிய விவகாரம்!

market governor batticalo eastern province eravoor
By Kalaimathy Nov 30, 2021 09:45 AM GMT
Report

ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பக்ஸ் கடிதம் அனுப்பிய விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி எதிர்வினையாற்றத் தொடங்கியதன் விளைவாக நகர சபை பொதுச் சந்தை என ஆளுநர் மாற்றிக் கொண்டதாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் 44வது சபை அமர்வு அச்சபையின் சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. சபை அமர்வுக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்திய போதே தவிசாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ஏறாவூர் சிங்களச் சந்தை விடயமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கிழக்கு மாகாண ஆளுநர் கடந்த வெள்ளிக்கிழமை பக்ஸ் மூலம் அழைப்புக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இந்த விடயத்தை நான் நகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பொழுது பூர்வீகமாக ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமான பொதுச் சந்தையை ஏறாவூர் சிங்கள சந்தை என ஆளுநர் குறிப்பிட்டிருந்த விடயம் விவகாரமாகியது.

அதன் அடிப்படையில் உடனடியாக இந்த விடயம் சம்பந்தமாக ஆளுநருடன் தொடர்பு கொண்டு ஏறாவூர் பொதுச் சந்தையை நீங்கள் சிங்கள சந்தை எனக் குறிப்பிட்டது தவறு என்றும் அவ்வாறான தலைப்புடன் கூட்டப்படும் கூட்டத்திற்கு நாங்கள் சமுகமளிக்கமுடியாது என்ற விடயமும் ஏறாவூர் நகர சபையின் பொதுச் சந்தை விடயம் என்று அழைத்தால் மாத்திரமே நாங்கள் சமுகமளிப்போம் என்ற விடத்தையும் ஆளுநருக்கு உறுதிப்படத் தெரிவித்தோம்.

அதன் பின்னர் ஆளுநர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஏறாவூர் நகர சபையின் பொதுச் சந்தை என்று தலைப்பிட்டு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். தனக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் தான் அவ்வாறு சிங்கள சந்தை எனக் குறிப்பிட்டதேயல்லாமல் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்றும் ஆளுநர் எம்மிடம் குறிப்பிட்டார்.

மேலும் இந்த ஏறாவூர் பொதுச் சந்தை விடயமாக ஆளுநரிடம் சில தவறான விடயங்களை முறைப்பாட்டாளர்களான சிங்கள வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள் என்ற விவரமும் தெரியவந்தது.

இந்த விடயத்தை நாங்கள் தெளிவுபடுத்தியதன் பின்னர் ஏறாவூர் நகரசபை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டுள்ளது என்பதை ஆளுநர் புரிந்து கொண்டார். ஏறாவூர் நகர சபையின் பொதுச் சந்தையில் சட்டவிரோதமாக அத்துமீறி உள்நுழைந்துள்ள மூன்று சிங்கள சமூகத்தவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஏறாவூர் நகர சபையால் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

எனினும் இது நகர சபை எடுக்கக் கூடிய தீர்மானம் என்று ஆளுநரிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி