‘இராணுவமே ஊடகவியலாளர்களை தாக்காதே’ -மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
batticaloa
protest
journalist
By Sumithiran
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸவச்சந்திரன்(Visvalingam Visvachandran) இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒனறியம், மட்டு ஊடக மையம் மற்றும் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் பிற்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்