பயணத் தடையின் போது வீதி விபத்தில் படுகாயமடைந்த நபர்!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருர் படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்துக்கொண்டிருந்த வேளை, துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த நபர் வீதிக்குக் குறுக்காக செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய அப்துல் ஹமீட் றாசிக் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

