தற்கொலைதாரி சஹ்ரானின் பள்ளிவாசலை மீள ஒப்படைக்கக் கோரும் மக்கள் - மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!
காத்தாங்குடி நகரில் முஸ்லிம் மக்களால் கடையடைப்பு போராட்டமும் கருத்தால் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த கதவடைப்பு போராட்டம் இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டையே உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் கைவசம் இருந்த பள்ளிவாசல் விவகாரம் காரணமாக இந்த கடை அடைப்பும் கருத்தால் போராட்டமும் முன்னெடுக்கப்படடுக்கென்டிருகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் காரணமாக 300க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுவர்கள் பெரியோர்கள் முதல் உயிரிழந்த நிலையில் சஹ்ரானால் பராமரிக்கப்பட்டு வந்த பள்ளிவாசலானது பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கையகப்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலை மீள வழங்க கோரியே காத்தான்குடி முஸ்லிம் மக்களால் இந்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அந்த பள்ளிவாசல் காத்தாங்குடி மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்தது. அத்துடன் சஹ்ரான் தங்களது காத்தான்குடி நகருக்கு ஒரு அவமானம் என்றும் அந்தப் பள்ளிவாசலை உடைத்து தரைமட்டமாக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
கடையடைப்புப் போராட்டம்
ஆனால் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்ட குறித்த பள்ளிவாசலினை விடுவிக்க கோரி கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் குறித்த பள்ளிவாசல் தொடர்பில், காத்தாங்குடியில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும் இன்று குறித்த பள்ளிவாசலினை விடுவிக்குமாறு கூறுவது ஏனைய மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற நடவடிக்கைகள் பூர்த்தி அடையாத நிலையிலும் பள்ளிவாசலினை விடுவிக்க கோருவது சட்டத்துக்கு முரணான விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் அச்ச நிலை
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரியிருக்கின்ற நிலையிலும் காத்தாங்குடி மக்கள், பள்ளிவாசலை விடுவிக்க கோரி கடை அடைப்பு நடத்துவது என்பது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
தற்போது தேர்தல் மேடைகளிலும் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தலைநகரம் என்றும் கிழக்கிஸ்தானை நோக்கிய ஒரு சிந்தனை இருப்பதாகவும் தெரிவித்து வருகின்ற நிலையில் இன்றைய இந்த கடையடைப்பு போராட்டம் தமிழ் மக்களிடையே ஒரு பாரியத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்