கோர விபத்தில் சிக்கிய மூவர் ஆபத்தான நிலையில்!
மட்டக்களப்பு – சந்திவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு – சந்திவெளி காவல்துறை பிரிவில் பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மூவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பேருந்துடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே மோதிள்ளது.
முச்சகர வண்டியின் டயர் வெடித்ததன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

